விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக வீரம் படத்தின் ரீமேக்கான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
unknown nodePooja Hegde [Image Source : Google ]
இந்த திரைப்படம் வரும் நாளை ரமலான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்.
unknown nodePooja Hegde [Image Source : Google ]
அப்போது பேசிய அவர் ” தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தேன். எனக்கு மொழி தெரியாது என்பதால் நடிக்கும் போது முதலில் ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான் சினிமா துறையில் பல ஆரம்ப காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து இருக்கிறேன்.
unknown nodePooja Hegde [Image Source : Google ]
என்னுடைய படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் நான் 1 வருடமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். இது சற்று எனக்கு வேதனையை கொடுத்தது. பிறகு திடீரென்று பட வாய்ப்புகள் குவிந்தது அதன்பிறகு பிசியாக நடிக்கத் தொடங்கினேன். என்னுடைய வாழ்க்கையின் கதை ஒரு நாள் யாரையாவது ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் ” என கூறியுள்ளார்.