அயலான் படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

The latest information about the teaser of the movie Ayalon has been released.

அயலான் திரைப்படத்தின் டீசர் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது படத்திற்கான டீசர் தயாரிக்கவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது அயலான் படத்தின் டீசர் டாக்டர் திரைப்படம் வெளியான அடுத்த தினத்தில் வெளியீடபடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடியில் வெளியீடுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.