காமெடி நடிகராக கலக்கி வரும் சூரி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeviduthalai soori and vjs [Image Source : Twitter]
படத்தின் ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeSoori [Image Source: Twitter ]
மேலும் விடுதலை-1′ படத்தை தொடர்ந்து நடிகர் சூரிக்கு தொடந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி அவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeSoori New Movie [Image Source: Twitter ]
அந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஸ்வா இயக்கத்தில், விக்ரம் சுகுமாறன் தயாரிப்பில் ஒரு படம், ‘காக்கி சட்டை’ பட இயக்குநர் துரை செந்தில் குமார் படத்திலும் நடிக்க உள்ளார். இதனால், காமெடியனாக இருந்த சூரி, இனி ஹீரோவா ஒரு ரவுண்ட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.