வசூல் வேட்டையில் 'வாத்தி'... ! 3 நாளில் இத்தனை கோடியா..?

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இய்குனார்

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இய்குனார் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

unknown node

Vaathi box offfice [Image Source : Google ]

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். தமிழில் படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ, அதே அளவிற்கு தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

unknown node

Vaathi [Image Source : Google ]

அதன்படி, இந்த வாத்தி திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 44 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். தெலுங்கில் மட்டும் படம் 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் நாளை படம் 50 கோடி வசூலை கடந்துவிடும் என தெரிகிறது.

unknown node

vaathi dhanush [Image Source : Twitter]

40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களிலே பட்ஜெட்டை தாண்டி அதிக வசூல் செய்து தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.