நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான் ” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சில படங்களின் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
unknown nodeAranmanai 4 [Image Source : Twitter]
அது மட்டுமின்றி, விரைவில் “அரண்மனை 4” படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ஏனென்றால் விஜய் சேதுபதி சம்பளமாக 10 கோடி கேட்டு உள்ளாராம்.
unknown nodearanmanai 4 [Image Source : Google ]
இதனால் மறுத்த சுந்தர் சி 5 கோடி சம்பளம் 40 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கூறியுள்ளாராம். இதனால் விஜய் சேதுபதி சம்மதம் தெரிவிக்காமல் படத்தில் இருந்து விலகி விட்டாராம். எனவே தற்பொழுது சுந்தர் சியே அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
unknown nodevijay sethupathi vignesh shivan
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.