900 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம்..! இணையும் 'தளபதி விஜய் – ஷாருக்கான்'.!? வெளியான மாஸ் தகவல்...

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயும், பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஷாருக்கானும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயும், பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஷாருக்கானும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட. இந்நிலையில், இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி வைரலாகி கொண்டு இருக்கிறது.

unknown node

shahrukh khan and vijay [Image Source : Twitter]

அது என்னவென்றால், ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து டூயல் ஹீரோ உள்ள படத்தில் நடிக்க உள்ளார்களாம் . அந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியுள்ளது. படத்தை சங்கர் இயக்குகிறார் என்றால் பிரம்மாண்டம் இல்லாமல் இருக்குமா..? படத்தின் பட்ஜெட்டே மிகப்பெரியது.

unknown node

shahrukh khan and vijay shankar [Image Source : Twitter]

ஆம் கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 900 கோடி  பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாம். இந்த படத்தை தயாரிப்பதற்காக இரண்டு பெரிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஷங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2, திரைப்படத்தையும் ராம்சரணின்-15 வது திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

unknown node

S. Shankar [Image Source : Twitter]

இந்த படங்களை முடித்த பிறகு விஜய்- ஷாருக்கானை வைத்து அவர் இந்த பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளதாகவும் கூறபடுகிறது. இந்த தகவல் உண்மையா..? அல்லது இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இருவருமே உச்ச நட்சத்திரம் என்பதால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்த கண்டிப்பாக படம் பெரிதாக பேசப்பட்டு வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.