ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.
unknown nodeConnect Movie [Image Source: Twitter ]
படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வெறும் 99 நிமிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படியுங்களேன் –போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்…? ‘துணிவு ‘ இயக்குனர் செய்யப்போகும் தரமான சம்பவம்.!
unknown nodeConnect Movie Nayanthara [Image Source: Twitter ]
படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகிறது. வெளியான இரண்டு நாட்களில் படம் 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்கள் கிருஸ்துமஸ் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeConnect Movie [Image Source: Twitter ]
இந்நிலையில், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ. 15 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. இதன் மூலமே படத்திற்கு 10 கோடி லாபம் வந்துள்ளதாக கூறப்டுகிறது.