முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக ராவணன், எந்திரன் படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களை அடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.
unknown nodeஇந்த படத்தை அடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளாராம். சிரஞ்சீவி தற்போது சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.