ஒரே மேடையில் அஜித் – விஜய்யை அழைத்த ராஜமௌலி.?! கடைசியில் நடந்தது என்ன.?

RRR இயக்குனர் ராஜமௌலி தளபதி விஜய் மற்றும் அஜித்குமாரையும் ஒரே மேடையில் வைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டாராம். ஆனால், அது நடக்காமல் போனது.

RRR இயக்குனர் ராஜமௌலி தளபதி விஜய் மற்றும் அஜித்குமாரையும் ஒரே மேடையில் வைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டாராம். ஆனால், அது நடக்காமல் போனது.

பாகுபலி ப்ரமாண்டங்களை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து ரிலீசுக்கு ரெடியாகி இருந்த திரைப்படம் RRR. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் முன்பதிவு வரை தொடங்கி ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்யவே ஆரம்பித்துவிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டனர்.

unknown node

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே பல கோடி செலவு செய்திருந்தது RRR படக்குழு. எந்த மொழியில் வெளியாகிறதோ அந்த மொழியில் உள்ள பிரபல ஹீரோவை வைத்து நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர்.

அந்த வகையில் மும்பையில் சல்மான் கானை வைத்து RRR ஹிந்தி ப்ரோமோஷன் நடைபெற்றது. தமிழில் ப்ரோமோஷன் என்றதும் ராஜமௌலி தளபதி விஜய் மற்றும் அஜித்குமாரையும் ஒரே மேடையில் வைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டாராம்.

unknown node

அதனால், அவரே நேரடியாக முதலில் அஜித் தரப்பிக்ரு அழைப்பு விடுத்தாராம். அஜித் அவரது பட ப்ரோமோஷனிலேயே கலந்துகொள்ள மாட்டார் இதில் மற்ற நிகழ்ச்சி என்றால் கேட்கவா வேண்டும். அன்பாக சொல்லி மறுத்துவிட்டாராம். அதே போல விஜயும் அன்பாக அழைப்பை மறுத்துவிட்டாராம்.

ஆனால், தமிழில் அதற்கடுத்தபடியாக சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என லிஸ்ட் இருக்க, கடைசியில் சிவகார்த்திகேயனை அழைத்துவிடுங்கள் என கூறிவிட்டாராம் ராஜமௌலி. கடைசியாக சிவகார்த்திகேயன் RRR தமிழ் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார்.

யார் கலந்துகொண்டு படத்தை ப்ரொமோட் செய்து என்ன பயன் கடைசியில் படம் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி போனது தான் மிச்சம்.