விவாகரத்துக்கு பின்பும் பாசத்தை மறக்காத பாலா.! ரத்த பாசம்னா சும்மாவா.?

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நந்தா, பிதா மகன்,

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நந்தா, பிதா மகன், ஆர்யாவின் நான் கடவுள் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

unknown node

மேலும், இதில் ‘நான் கடவுள்’ திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனர் பாலா முத்து மலர் என்பவரை கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 17 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

unknown node

இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற தமிழச்சி தங்க பாண்டியன் இல்லத்திருமண விழாவில் பாலா மற்றும் முத்துமலர் கலந்துகொண்டனர். அப்போது தனது மகளை கண்ட பாலா அவரை தனது மடியில் உட்கார வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். அதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node