தீபாவளிக்கு வெடிக்கும் பீஸ்ட் அரபி பாடல்.! வெளியான மாஸ் அப்டேட்.!

Beast Arabic song that explodes for Deepavali. Mass update released

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தமிழும் அரபி மொழியும் கலந்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் விஜய் “பீஸ்ட்”படத்தில் நடித்து வருகிறார். படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் -20 ஆம் தேதி தேதி படக்குழுவினர் டெல்லி செல்கின்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தமிழும் அரபி மொழியும் கலந்து இடம்பெற்றுள்ளதாகவும், அப்பாடல் வரும் நவம்பர் 4 – ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.