தமிழகத்தில் வசூல் வேட்டை செய்த வலிமை..! எத்தனை கோடி தெரியுமா..?

வலிமை திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வலிமை திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.

unknown node

வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 35 கோடி மேல் வசூல் செய்து. பல வசூல் சாதனைகளை முறியடித்தது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதால், ரசிகர்கள் அனைவரும் வலிமை  திரைப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

unknown node

மேலும், நாளுக்கு நாள் வலிமை திரைப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல  சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில் இத்திரைப்படம் தற்போது வரை தமிழகத்தில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வலிமை திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.