“ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ” மூலம் படங்களை நடிகர் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இதுவரை 55 திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் தயாரிக்கவுள்ள 56-வது படத்தில் ஹீரோவாக நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார்.
unknown nodestr 48 update [Image Source : Twitter]
சிம்புவின் 48-வது திரைப்படமாக இந்த திரைபடம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். படத்திற்காக நடிகர் சிம்பு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது.
unknown nodeSTR update [Image Source : Twitter]
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படத்தில் நடிக்க முதலில் சிம்பு 40 கோடி கேட்டுள்ளாராம். பிறகு கமல்ஹாசன் சற்று பேச்சுவார்த்தை நடத்தி 10 கோடி சம்பளத்தை குறைக்க கூறியுள்ளாராம்.
unknown nodeSTR DANCE [Image Source : Google ]
கமல்ஹாசன் கூறியதால் தனது சம்பளத்தை 10 கோடியாக குறைத்து கொண்டு இந்த படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். மேலும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.