சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது.
unknown nodeஇப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே, அதன் ஓடிடி இணையதளத்தில் வெளியிடுவதற்கான உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு 20 கோடிக்கும், கலைஞர் டிவிக்கு 18 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் முதலில் திரையரங்கில் தான் வெளியாகிறது. அதன் பிறகு தான் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.