வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கும் தனது 42-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கும் தனது 42-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்கள்.

unknown node

இந்த திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் மட்டுமே முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இயக்குன வெற்றிமாறன் வாடிவாசல் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் படத்தின் பணிகளை தொடங்குவார் என தெரிகிறது.

unknown node

இதற்கிடையில் நடிகர் சூர்யாவும் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42  வது படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் மாதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்-நயன்தாரா படத்துக்கு புது சிக்கல்.. ரிலீஸ் செய்ய தயங்கும் படக்குழு…வெளியான பகீர் பின்னணி.!

unknown node

அது என்னவென்றால், வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் எனவும், படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியீட படக்குழு திட்டமிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.