பிரபல பாலிவுட் நடிகையை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா.?

It has been reported that Vijay devarakonda is in love with famous Bollywood actress Sara Ali Khan.

பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.‘அர்ஜூன்ரெட்டி’  படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது.அதனைதொடர்ந்து நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்லர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.தற்போது லைகர் எனும் இந்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

வழக்கமாக நடிகர்கள் காதல் வலையில் சிக்கியதாக பல தகவல்கள் வெளியாவதும், அதற்கு நடிகை, நடிகர்கள் மறுப்பு தெரிவித்ததும் வழக்கமான ஒன்று தான்.ஏற்கனவே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த ரஷ்மிகாவை விஜய் தேவரகொண்டா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகரின் மகளும் ,நடிகையுமான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சாரா அலிகான் ஏற்கனவே மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோரை காதலித்ததாகவும் ,அதன் பின் சில காரணங்களால் அவர்களுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்தது முதல் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.