தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரு மகள்களும் ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு ரோஹித் தாமோதரன் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி , கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்தது.
unknown nodeஅப்போது, கொரோனா சூழலால் நெருங்கிய குடும்ப நண்பர்களை மட்டும் அழைத்து இவர்களது திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆகியோர் இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
unknown nodeஇந்த நிலையில். கொரோனா பரவல் குறைந்த பிறகு, திரையுலகில் உள்ள அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். அதன்படி, இயக்குநர் இப்போது வரவேற்புக்கான தேதியை குறித்து பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
unknown nodeஇதில், முதல் பத்திரிகையை தன் முதல் படத் தயாரிப்பாளரான ‘ஜென்டில்மேன்’ படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோனுக்கு வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
unknown nodeஇந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஷங்கரின் இளையமகள்மற்றும் விருமன் படத்தின் கதாநாயகியான அதிதி ஷங்கருக்கு தான் திருமணம் என செய்திகளை பரப்பிவிட்டனர்.
unknown nodeஆனால், அது வதந்தி என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் முதல் மகள் ஐஸ்வர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தான் பத்திரிக்கை வைக்கச்சென்றுள்ளார். ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகின்ற மே மாதம் 1-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.