நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்“தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeTanggalan [Image Source: Twitter ]
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்திற்கான முதல்“Glimpse”வீடியோ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
unknown nodeMalavika Mohanan Tangalaan [Image Source: Twitter ]
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் மாளவிகாவுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
unknown nodeMalavika Mohanan [Image Source: Twitter ]
படத்தில் மாளவிகா மோகனன் எதிர்பார்த்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுக்கவில்லை என்பதால் பா. ரஞ்சித் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் மாளவிகா மோகனனுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தகவலை பரப்பி வருகிறார்கள்.