தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்க மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்து உள்ளார். அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ளது
தல 60 என தற்காலிமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க போனிகபூரின் மகள் ஜான்விகபூர் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.