பிரபல இயக்குனருடன் இணையும் கார்த்தி.!?

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் "சர்தார்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவரது நடிப்பில் ஏற்கனவே  “பொன்னியின் செல்வன்”, “விருமன்” ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது.

unknown node

இதில் விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியும், சர்தார் படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு கார்த்தி நடித்த 3 படங்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node

இதில் சர்தார் படத்தை முடித்துவிட்டு கார்த்தி எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போது அதற்கான புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

unknown node

அது என்னவென்றால், நடிகர் கார்த்தி அடுத்ததாக தமிழ் சினிமாவில், கனா, நெஞ்சிக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகவுள்ளதாம்.

unknown node

இந்திய அளவில் பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் இருக்குமாம் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தையும் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.