கார்த்திக்கு 3-வது பிளாக் பஸ்டர்..'சர்தார்' படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

unknown node

Sardar2 Commencing Soon [Image Source: Google/cinebloopers]

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Sardar Moive Poster [Image Source: Google]

இந்த நிலையில், படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

Sardar Review [Image Source: Twitter ]

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்திற்கான வசூல் வரும் நாட்களில் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.