இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
பலத்த எதிர்பார்க்கு மத்தியில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில், மாநாடு படத்திற்கு பிறகு வந்த சிறந்த படம் எனவும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 66 லட்சம் வசூல் செய்துள்ளதாம். இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் 62 லட்சம் தான் வசூல் செய்திருந்ததாம். இதன் மூலம் சூர்யா பட வசூல் சாதனையை முறியடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.