குற்ற பரம்பரை ரீ-ஸ்டார்ட்.! பாலா விட்டதை இயக்குனர் சசிகுமார் பிடிக்கவுள்ளார்.!?

இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் தயாரிக்க சசிகுமார் இயக்கி நடித்து வெளியாக உளதாம் குற்ற பரம்பரை.

இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் தயாரிக்க சசிகுமார் இயக்கி நடித்து வெளியாக உளதாம் குற்ற பரம்பரை.

வேல ராமமூர்த்தி இவரை தமிழ் சினிமாவில் நல்ல குணச்சித்திர நடிகராக தான் பெரும்பாலானோருக்கு தெரியும். அதுவும், மதுரை, ராமநாதபுரம் போன்ற தென்னகத்து சினிமாக்களில் இவரை அதிகம் காணமுடியும். இவர் நல்ல எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய குற்ற பரம்பரை நாவல் மிகவும் பிரபலம்.

இந்த நாவலை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்க இயக்குனர் பாலாவுக்கும், இயக்குனர் பாரதிராஜாவுக்கும் ஒரு பனி போரே நடைபெற்றது என கூறலாம். பாரதிராஜா இந்த கதையை தானே நடித்து வெப் சீரியலாக எடுக்க தொடங்கினார். ஆனால், அது கால போக்கில் நின்றுவிட்டது.

unknown node

அடுத்து இயக்குனர் பாலா முயன்றார். ஆனால், அது தற்போது வரை எந்த நகர்வும் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த நாவலை மையமாக கொண்ட கதையை இயக்குனர் சசிகுமார் கையில் எடுத்துள்ளார். அவரே இதில் நடிக்கவும் உள்ளாராம். இந்த படத்தை வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.