மறைந்த நடிகை ஜமுனா பயோபிக் படம்... ஹீரோயினாக நடிக்க போகும் பிரபல நடிகை.?

மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், படத்தில் கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், படத்தில் கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஜமுனா

கடந்த 1953-ஆம் ஆண்டு வெளியான ‘புட்டிலு’  படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜமுனா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கி சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ராமராவ், அக்கினேனி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

unknown node

jamuna [Image Source : Twitter]

தமிழில் குழந்தையும் தெய்வமும்,  மனிதன் மாறவில்லை, மிஸ்ஸியம்மா, தூங்காதே தம்பி தூங்காதே, தங்கமலை ரகசியம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே 1950,1960 களில்  எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார்

நடிகை ஜமுனா மறைவு

unknown node

RIP Jamuna [Image Source : Twitter]

கடந்த 27-ஆம் தேதி  நடிகை ஜமுனா தனது 80- வயதில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். பல பிரபலன்களும் இவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

நடிகை ஜமுனாவின் பயோபிக் படம்

நடிகை ஜமுனா உயிரோடு இருக்கும்போதே அவருடைய வாழ்கை வரலாறு படமாக எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாம். தற்போது அதற்கான திரைக்கதை எழுதும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், படத்தை தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

jamuna tamanna [Image Source : Twitter]

அதுமட்டுமின்றி, சுவாரசியமான தகவல் என்னவென்றால், நடிகை ஜமுனாவின் வாழ்கை வரலாற்றில் அவருடைய கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். பேச்சுவார்த்தை நடந்துமுடிந்த பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.