விக்னேஷ் சிவனுடன் இணையும் 'லவ் டுடே' பிரதீப்.! புது படத்தின் புதிய தகவல்.!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பல

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும், அவரை வைத்து படம் இயக்க சில இயக்குனர்களும் ஆசையுடன் அந்த வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

Pradeep Ranganathan [Image Source : Twitter]

இந்த நிலையில், அடிக்கடி அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த தகவலும் இணையத்தில் பரவி வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரதீப் ரங்கநாதன் சிம்பு நடிக்கவிருந்த கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்கவிருந்ததாக தகவல்கள் பரவியது.

unknown node

Vignesh Shivan Smile [Image Source : Google ]

அதனை தொடர்ந்து தற்போது அடுத்ததாக ஒரு புதிய தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

Vignesh Sivan quits AK62 [Image Source: Twitter ]

ஏற்கனவே அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. பிறகு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவியது. அதனை உறுதி படுத்தும் வகையில், விக்னேஷ் சிவனும் தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்த ஏகே 62 பெயரை நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.