மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்.
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வைத்து இரண்டு படங்களை இயக்கவுள்ளார். இதில் முதலில் உதயநிதி ஸ்டாலின் வைத்து படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பரவியது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeதமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பஹத் பாசில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்துவருகிறார்.
unknown nodeதமிழில் அவரது நான்காவது படமாக மாரி செல்வராஜ் படம் இருக்கும். உதயநிதி தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.