அடி தூள்...முதல் முறையாக ரஜினியுடன் இணையும் மோகன்லால்.! 'ஜெயிலர்' படத்தில் இத்தனை சூப்பர் ஸ்டார்களா..?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

Mohanlal Is Acting In Jailer Movie [Image Source: Twitter ]

இந்த  படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்து வரும் நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக புதியதாக தகவல்கள் கசிந்துள்ளது. அவருடைய காட்சிகள் 2-3 நாட்கள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்-என் வாழ்க்கையில் நடந்த சோகம் இதுதான்…வேதனையுடன் பேசிய லைலா.!

unknown node

3superstars are acting in Jailer [Image Source: Twitter ]

மோகன் லால் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது தான். மேலும். “ஜெயிலர்” படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் என மொத்தமாக மூன்று சூப்பர் ஸ்டார் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

unknown node

Jailer [Image Source: Google ]

மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 % முடிந்துள்ளது. படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. அந்தவிழாவிலே படத்தின் டீசரை வெளியிட படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.