தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தற்போது சமந்தா கலக்கி கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இவர் தற்போது, விஜய் தேவரா கொண்டாவிற்கு ஜோடியாக “குஷி ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
unknown nodeஇதற்கிடையில், நடிகை சமந்தா சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்லவுள்ளாராம். ஏனென்றால், சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சருமநோய் பிரச்னை காரணமாக அவர் அவதிப்பட்டிருந்தார். படப்பிடிப்புகளில் அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் நடித்ததால் தனக்கு இதுபோல் அலர்ஜி ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
இதையும் படியுங்களேன்-நடிப்புக்கு குட்பை… ஆனால்.. சினிமாவில் இருந்து விலகவில்லை.! நயன்தாராவின் மாஸ்டர் பிளான் இதோ…
unknown nodeஇதன் காரணமாகவே பிறகு 6 மாதங்கள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் தான் அவருக்கு ‘கடல்’, ‘ஐ’ ஆகிய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.
unknown nodeஇதனையடுத்து, சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் எந்த புகைப்படங்களும் வெளியீடாமல் இருக்கும் சமந்தாவுக்கு மீண்டும் ஸ்கின் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சினிமாவில் அதிக ஈடுபாடு செலுத்த முடியவில்லை” என கூறி வருகிறார்கள். உண்மையில் அவருக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.