ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!

Nagma சினிமாவில் பொதுவாக ஒரு படத்தின் கதை மேல் தனக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை என்றால் அந்த படங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் யோசிப்பது உண்டு. அதன்பிறகு

rajinikanth and Nagma

Nagma சினிமாவில் பொதுவாக ஒரு படத்தின் கதை மேல் தனக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை என்றால் அந்த படங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் யோசிப்பது உண்டு. அதன்பிறகு அந்த படத்தில் வேறு பிரபலங்கள் நடித்து ஹிட் ஆகிவிட்டது என்றால் வருத்தப்படுவதும் உண்டு. அப்படி தான் நடிகை நக்மாரஜினியின்மெகாஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகி அதன் பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.

READ MORE –உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான்படையப்பா. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சௌந்தர்யா நடித்து இருப்பார். வில்லி கதாபாத்திரத்தில் நடிகைரம்யா கிருஷ்ணன்நடித்து இருப்பார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

read more-குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை நக்மா தான் நடிக்க இருந்தாராம். நடிக்க கமிட் ஆகிவிட்டு ஷூட்டிங் செல்லவேண்டி இருந்த சமயத்தில் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவினரிடம் கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம். மற்ற படங்களின் கால்ஷீட் பிரச்னையா அல்லது கதை மீது நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை.

READ MORE –ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

ஆனால், படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டுநக்மாதிடீரென விலகியது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். பிறகு அவசர அவசரமாக படத்தில் நடிக்க வைக்க சௌந்தர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அவர் படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் அவரை விட யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஏனென்றால், அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருப்பார்.