கார்த்தி – ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது.
விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இதில் பொன்னியின் செல்வனும் சர்தார் படமும் பல கோடிகளை வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த தகவல் உறுதியான நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த அணு இம்மான்னு வேல் நடிக்கவுள்ளதாகவும், படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்கான மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.