அடுத்த பான் இந்தியா படம் ரெடி...தமிழ் இயக்குனருடன் இணையும் ராக்கி பாய்.!?

கேஜிஎப் எனும் அதிரடி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் யாஷ். தற்போது ராக்கி பாய் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் மட்டும்

கேஜிஎப் எனும் அதிரடி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் யாஷ். தற்போது ராக்கி பாய் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் மட்டும் தான். அந்த அளவிற்கு மிகவும் கெத்தாக கேஜிஎப் இரண்டு பாகங்களிலும் நடித்து மிரட்டி இருப்பார். இரண்டு பாகமும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பல சாதனைகள் படைத்தது என்றே கூறலாம்.

unknown node

yash [Image Source : Twitter]

இந்த படங்களின் மூலம் நடிகர் யாஷிற்கு மார்கெட்டும்  சற்று உயர்ந்துள்ளது. இதனால் அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், யாஷ் அடுத்ததாக தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டுள்ளதாக ஒரு சூப்பரான தகவல் ஒன்று  இணையத்தில் கசிந்துள்ளது.

unknown node

ps mithran and yash new movie [Image Source : Twitter]

அதன்படி, நடிகர் யாஷ் பிரபல இயக்குனரான பி.எஸ். மித்ரனிடம் ஒரு கதை கேட்டுள்ளாராம். அந்த கதை யாஷிற்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுகப்படுகிறது.

unknown node

yash new Ban India Movie 2 [Image Source : Twitter]

மேலும், இந்த படமும் ஒரு பெரிய பான் இந்தியா படமாக தான் உருவாகிறது.  யாஷ் தற்போது பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். எனவே, இனிமேல் அவர் நடிக்கும் படங்கள் பான் இந்திய மொழிகளில் தான் வெளியாகும். பி.எஸ் மித்ரன் கடைசியாக கார்த்தியை வைத்து சர்தார் எனும் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருந்தார். அவரும் யாஷும் இணைந்து ஒரு படம் செய்தால் கண்டிப்பாக படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.