எந்த காடாக இருந்தாலும் லத்தியோடு நான் வரேன்...! விஷால் எடுத்த அதிரடி முடிவு...?

நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா

நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

unknown node

அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழ் தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சண்டைக் காட்சிகளுக்கானVFXபணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், படத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி இல்லாமல் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

ஏற்கனவே செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படமும் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும் அதே தினத்தில் தனது லத்தி படத்தை வெளியிட விஷால் முடிவெடுத்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

unknown node

இந்த நிலையில், விஷாலின் லத்தி படம் அறிவித்தபடி, வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகிறதா அல்லது செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.