விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்...தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!!

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தன்னுடைய 68-வது

vijay and priya bhavani shankar

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

புதிதாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று கூறலாம். இதற்கிடையில்,  படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு.

அந்த வகையில் தற்பொழுது பரவும் தகவல் என்னவென்றால் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.