நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான 4-ஆம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கூட நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் லோகேஷ் தான் தளபதி 67 படத்தை இயக்குகிறார் என தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeவிஜய் -லோகேஷ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இணைவதால், படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டார் படமாக உருவாகவுள்ளதாம்.
unknown nodeஇந்த நிலையில், தளபதி 67 படத்தில் பிரபல நடிகையான சமந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளாராம். தளபதி 67 அறிவிப்பு வெளியாகும் போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக சமந்தா கத்தி, தெறி, மெர்சல், ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.