நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார்.
இவர் தமிழிலும் பாக்ஸர், போடா முண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நன்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் நிக்கிகல்ராணி. இவரது தங்கை சஞ்சனா கல்ராணி தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் தமிழில் அருண் விஜய் நடித்து வரும் பாக்ஸர் திரைப்படத்திலும், விஜய் டிவி புகழ் ராமர் நடித்து வரும் போடா முண்டம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
unknown nodeஇவர் அண்மையில் பிரபலங்கள் கலந்துகொண்ட இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் ஒரு தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக சஞ்சனா மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் சஞ்சனா தரப்பு இரவு நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மைதான். ஆனால், பீர் பாட்டிலால் தாக்கும் அளவிற்கு வாக்குவாதம் செல்லவில்லை. என விளக்கம் தரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.