சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரெமோ படத்தின் மூலம் விநியோகிஸ்தர் ஆர்.டி.ராஜா முதன் முதலாக 24ஏஎம் நிறுவனம் மூலம் படம் தயாரித்து வெற்றிகண்டார். அதற்கடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.அதன் பிறகு சிவகார்த்திகேயன் – இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஆர்.டி.ராஜா தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜே.ஆர்.நிறுவனம் தான் சிவகார்திகேயனின் ஹீரோ படத்தை தயாரித்து வருகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா அடுத்ததாக வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த மூன்று படங்களுக்கும் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்ற உள்ளாராம். அதனால் தான் சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் சீமராஜா பட தயாரிப்பாளரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரெமோ படத்தின் மூலம் விநியோகிஸ்தர் ஆர்.டி.ராஜா முதன் முதலாக 24ஏஎம் நிறுவனம் மூலம் படம் தயாரித்து வெற்றிகண்டார். அதற்கடுத்து,