நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.
unknown nodeMaaveeran-Movie [Image Source: Twitter ]
அந்த திரைப்படத்தை இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான “ஸ்பைடர்” திரைப்படத்தை தயாரித்திருந்த பிரசாத் என்.வி. என்பவர் தான் தயாரிக்கவுள்ளாராம். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeA.R. Murugadoss Sivakarthikeyan Anirudh Ravichander [Image Source : Google ]
விரைவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeprasad n.v. sivakarthikeyan [Image Source : Google ]
அதன்படி, இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 5 கோடி சம்பளத்தை குறைத்து 15 கோடி சம்பளம் மட்டுமே வாங்கவுள்ளாராம். ஏனென்றால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை பிரசாத் என்.வி. தயாரிக்கிறார் என்பதால் கண்டிப்பாக தமிழையும் தாண்டி தெலுங்கு மொழியிலும் வெளியீட திட்டமிடுவார்.
unknown nodeSivakarthikeyan Smile [Image Source: Twitter]
எனவே, இந்த மாதிரி ஒரு திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்றால், தன்னுடைய சம்பளத்தை சற்று குறைத்தால் மட்டுமே இந்த படத்தை 80 கோடி பட்ஜெட்டில் எடுக்க முடியும், 100 கோடிகளுக்கு படத்தை தயாரிப்பாளர் வியாபாரம் செய்வார் சம்பளத்தை அதிகமாக கேட்டால் இந்த படத்தை பண்ண முடியாது என்கிற காரணத்தால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.