ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி தயாரித்து வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் காஞ்சனா 3. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இந்த படத்தினை அடுத்து மீண்டும் சன் பிக்ச்சர்ஸ் – ராகவா லாரன்ஸ் கூட்டணி இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாக உள்ளதாம். மேலும் இந்த படம் முழுக்க 3டி தொழில்நுட்பம் பயன்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.