நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்ப விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeRajinikanth And Ani join thalaivar 171 movie [Image Source : Twitter]
தற்காலிகமாக தலைவர் 170 எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 171-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeThalaivar171 [Image Source : Twitter]
அதன்படி, ரஜினியின் 171-வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர்,விக்ரம் உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.அந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeLokesh Kanagaraj [Image Source: Twitter ]
லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு அவர் ரஜினியை வைத்து இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதாகவும், அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.