நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், யோகிபாபு, சம்யுக்த்தா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeஇதனையடுத்து, இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. வாரிசு படத்தில் மகேஷ் பாபு 5 நிமிடம் வரவுள்ளதாகவும் நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்-அட்டை படத்திற்கு அசால்ட் போஸ்… வைரலாகும் வலிமை நாயகியின் கவர்ச்சி புகைப்படம்.!
unknown nodeஇன்று மகேஷ் பாபு, 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு வாரிசு படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதை படக்குழு இன்று அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.