கிரிக்கெட் வீரர் தோனி “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை இந்நிறுவனத்தின் சார்பில் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட் படங்கள் தான்.
unknown nodeDhoni Entertainment [Image Source: Twitter]
எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மட்டும் விளையாடிவிட்டு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அடுத்ததாக “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.
unknown nodeDhoni Entertainment [Image Source: Twitter]
தமிழில் முதன் முதலாக தான் தயாரிக்கும் முதல் படமே விஜய் படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்து இருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்தையையும் நடைபெற்று முடிந்துவிட்டதாகவும், தற்போது ஒப்பந்தம் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு, விஜய் தோனி தயாரிக்கவுள்ள படத்தில் நடிப்பதாக உறுதிகொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeVijay And Dhoni [Image Source: Google]
விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67 -வது படத்தில் நடிக்கவுள்ளார். பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனது 68 -வது படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
unknown nodeDhoni Produced By Vijay 70th movie [Image Source: Google]
மேலும், விஜயின் 70வது திரைப்படத்தை தான் தோனி தயாரிக்கிறாராம். ஏனெனில், தோனிக்கு பிடித்த எண் 7. எனவே விஜய் நடிக்கவுள்ள 70-வது படத்தை தோனி தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.