விரைவில் 'தளபதி 65' படத்தின் அப்டேட்.!

It has been reported that an update of thalapathy Vijay's next film thalapathy-65 will be released soon.

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

மார்ச் 15-ம் தேதி முதல் ரஷ்யாவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் ஹீரோயின் மற்றும் வில்லன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இப்படியிருக்க தளபதி 65 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருவதுடன் தளபதி 65 படத்தின் அப்டேட்டாக காத்திருக்கின்றனர்.