தளபதி 66 அப்டேட்.! விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

unknown node

இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகையாக வளம் வரும் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா நடித்திருந்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக ஹிந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது விஜய்யுடன் ராஷ்மிகா இணையவிருப்பதால் இந்தப் படத்துக்கு தெலுங்கு, ஹிந்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். விஜய் உடன் நடிக்க வேண்டும் பல பேட்டிகளில் ராஷ்மிகா வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.