நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் படத்திலிருந்து வெளியாகவில்லை. இதனால், படத்திற்கான அப்டேட் எப்போதுதான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இதையும் படியுங்களேன்-அவர் படம் என்றால் உடனே ஓகே தான்….சார்பட்டா மாரியம்மாள் ஓபன் டாக்.!
unknown nodeஇதனையடுத்து தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், வாரிசு படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்-சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் ட்ரைலர் வெளியானது.!
unknown nodeபடத்திற்கு தமன் இசையமைத்து வருவதால் பாடல்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் தீபாவளி அன்று வெளியாகும் வாரிசு படத்தின் முதல் பாடல் விஜயின் என்ட்ரி பாடலாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.