காற்று மாசுவால் தடைபட்டு இருக்கும் தளபதி விஜயின் புதிய திரைப்பட ஷூட்டிங்!

தளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து  வருகிறார்.இந்த படம் விஜயின் 64வது திரைப்படமாக உருவாகி வருகிறது.

தளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து  வருகிறார்.இந்த படம் விஜயின் 64வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோஹனன் ஹீரோயினாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, பவி டீச்சர் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.இப்பட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகமாக உள்ளதால், இப்படத்தின் வெளிப்புற ஷூட்டிங் தற்போது நடைபெறவில்லையாம். மாறாக கல்லூரியில் உட்புறம் நடைபெறும் ஷூட்டிங் மட்டும் நடைபெறுகிறது. இதனால் ஷூட்டிங் காலம் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.