சூர்யாவின் 41-வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடிக்கவுள்ளார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடிக்கவுள்ளார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பார் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தில் சூர்யா ஒரே கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாராம்.

unknown node

அந்த ஒரு கதாபாத்திரம் லோக்கல் டான் என கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 25 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.