நடிகை திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினி உலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அண்மைக்காலமாக பெரிய ஹீரோ படங்களில் கமிட் ஆகாமல் இருந்து வந்த இவர், தற்போது பரமபதம், ராங்கி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நேரடி தெலுங்கு படத்தில் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது.
unknown nodeதற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க திரிஷா கமிட்டாகி உள்ளாராம். தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க உள்ளாராம். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.