வடசென்னை -2 எப்போது.? மனம் திறந்த வெற்றிமாறன்.!

Vetrimaran has said that it will take at least two years for the second part of the vada Chennai film to be made.

வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த திரைப்படம் வடசென்னை .வசூல் ரீதியாக இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்போதே கூறியிருந்தார்.

ஆனால் அதன் பின் வடசென்னை 2 குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது வடசென்னை 2 குறித்து மனம் திறந்துள்ளார்.அதில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்று கூறியுள்ளார்.இது வடசென்னை இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.