நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeVadivelu Smile [Image Source: Twitter ]
இவரது நடிப்பில் இயக்குனர் சு ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடியனாக நடித்து கலக்கி வரும் வடிவேலு இதுவரை வில்லன் கதாபத்திரத்தில் நடித்ததே இல்லை.
இதையும் படியுங்களேன்-ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஆர்வ கோளாறு.. வத்திக்குச்சி வனிதா கடும் விமர்சனம்.!
unknown nodeVadivelu [Image Source: Twitter ]
இதனால் பல ரசிகர்கள் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் வடிவேலு வில்லனாக களம் இறங்கியுள்ளார்.
unknown nodeVadivelu And Gv Prakash [Image Source: Twitter ]
ஜிவி பிரகாஷிற்கு வடிவேலு வில்லனாக நடிக்கும் அந்த படத்தை சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கிய ராம் பாலா இயக்குகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காமெடியன், ஹீரோவாக கலக்கி வந்த வடிவேலு தற்போது வில்லனாக களமிறங்கியுள்ளதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.