தல அஜித்தின் வலிமை படத்தில் களமிறங்குகிறாரா அரவிந்த் சாமி?!

தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமான வலிமை தயாராக உள்ளது. H.வினோத் இயக்க உள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ்

தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமான வலிமை தயாராக உள்ளது. H.வினோத் இயக்க உள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.  தல அஜித்தின் புதிய கெட்டப் விடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. இது குறித்து அரவிந்த் சாமி தரப்பில் விசாரித்தபோது, வலிமை படம் பற்றி யாரும் பேசவில்லை. என தெரிவிக்கப்பட்டுளள்து. அரவிந்த்சாமி இதுவரை  வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என தெளிவாகியுள்ளது.